More on this book
Community
Kindle Notes & Highlights
"கடவுள் நம்பிக்கை எந்த அதிசயத்தையும் ஏற்படுத்தும்; ஒன்றைத் தவிரஅது படிக்காமல் தேர்வில் வெற்றி அடைவது.
பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள், அது உன்னைத் தொந்தரவு செய்வதை நிறுத்திவிடும்.
நல்லவையும் ஆக்கபூர்வமானதுமான அறிவுரைகள் தாம் சிறுவர்களின் உணர்ச்சிமிக்க செவிகளில் விழ வேண்டும். சிறு வயதில் உண்டாகும் கருத்துக்கள் பசுமரத்தாணிபோல பதிந்துவிடும்."
உன் நிதி நிலைமைக்குத் தகுந்தபடி வசதியாக இரு, என்று அவர் அடிக்கடி கூறுவார்.
"மருந்துகளுக்கு எல்லை உண்டு. தெய்வீகப் படைப்பாற்றல் பெற்ற உயிர்ச் சக்திக்கு எல்லையே இல்லை. அதை நம்பு; நீ நன்றா கவும் திடமாகவும் ஆவாய்."
"உண்மையில் உன் எண்ணங்கள்தான் உன்னை மாறி மாறி நலமுறவும் நோயுறவும் செய்கின்றன.'
இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்."
இந்த மண்ணின் இலவசக் காற்றை சுவாசிக்கும்வரை நீ அதற்கு நன்றியுடன் சேவை செய்வதற்குக் கடமைப்பட்டிருக் கிறாய். எவனொருவன் மூச்சற்ற நிலையில் கைதேர்ந்து விட்டானோ அவன் மட்டும்தான் உலகத்தின் கடமைகளைக் கைவிடலாம். அவர் உணர்ச்சியற்ற குரலில் மேலும் கூறினார்.
"உள்மனத்தின் மென்மையான பலவீனங்கள், ஒரு சிறு கண்டனத்தைக் கூடத் தாங்க முடியாமல் புரட்சி செய்யும்;
"தூக்கத்தில் நீ ஆணா, பெண்ணா என்பது உனக்குத் தெரிவதில்லை. ஓர் ஆண், ஒரு பெண்ணைப் போல் நடிப்பதால் அவன் பெண்ணாகி விடுவதில்லை. அதைப்போல் ஆத்மாவும் ஆணாகவும், பெண்ணாகவும் நடித்தாலும், எவ்வித மாற்றமும் இல்லாதிருக்கிறது. ஆத்மா என்பது மாறாத, நிர்க்குணமான கடவுளின் பிரதிபிம்பம்.
புலனின்ப சகதியில் உழலும்போது உலகத்தின் நுட்பமான நறுமணங்களை அவர்கள் இழக்கிறார்கள். காமத்தில் ஈடுபடுபவன் பகுத்தறிவின் எல்லா நுட்பங்களையும் இழந்தே விடுகிறான்."
"பேராசை இல்லாத பசி நியாயமானது போல் பாலுணர்ச்சியும் இயற்கையால் வம்சவிருத்திக்காகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் என்றுமே திருப்தியுறாத உடலுணர்ச்சியைத் தூண்டுவதற்காக உண்டாக்கப்படவில்லை," என்று அவர் கூறினார். "தவறான இச்சைகளை இப்பொழுதே அழித்து விடு. இல்லாவிடில் உன் சூட்சும சரீரம் பூத உடலை விட்டுப் பிரிந்த பிறகும்
"ஒன்றைப் பற்றி அதிகமான வார்த்தைகளால் தெரிந்து கொண்டிருப்பதும் அதைப் புரிந்து கொண்டிருப்பதும் வெவ் வேறானவை. அவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது," என்று அவர் குறிப்பிட்டார். "ஒவ்வொரு பத்தியையும் ஒரு நேரத்தில் உணர்ந்து கற்றால்தான், புனிதமான நூல்கள் ஆத்ம ஞானத்தை அறியும் ஆர்வத்தை தூண்டுவிக்க உதவுகின்றன. இல்லை யென்றால்தொடர்ந்த அறிவு பூர்வமான படிப்பானது அகந்தை, பொய்யான திருப்தி மற்றும் அரை வேக்காட்டு அறிவு ஆகியவை களைத்தான் உண்டாக்கும்."
கிரியாதிறவுகோலைத் தகுதியான சீடர்களுக்கு மட்டும் உபதேசம் செய், பாபாஜி கூறினார். எவனொருவன் இறைவனை நாடுவதில் எல்லாவற்றையும் துறப்பதாக சபதம் எடுத்துக் கொள்கிறானோ அவனே தியானம் என்ற விஞ்ஞானத்தின் மூலமாக வாழ்க்கையின் இறுதியான புதிர்களை அவிழ்க்கத் தகுதியுடையவன்.
இந்த லௌகீக உலகத்தில் எந்தப் பற்றும் இல்லாதவரின் ஆனந்தமான வாழ்க்கையை நினைத்துப் பார்: உடைகளைப் பற்றிய பிரச்சனையிலிருந்து விடுதலை; உணவைப் பற்றிய ஆசைகளிலிருந்தும் விடுதலை, பிச்சை எடுப்பதில்லை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தவிர சமைத்த உணவைத் தொடுவதில்லை, கையில் திருவோடு ஏந்துவதில்லை; எல்லா பணச் சிக்கல்களிலிருந்தும் விடுதலை, கையால் பணத்தைத் தொடுவதில்லை, பொருள்களை என்றும் பத்திரப்படுத்துவதில்லை, கடவுளையே எப்போதும் நம்பியிருப்பது, போக்குவரத்துப் பற்றி கவலை இல்லை, வண்டிகளில் எப்போதும் சவாரி செய்வதில்லை, ஆனால் புனித நதிகளின் கரைகளில் எப்பொழுதும் நடந்த வண்ணம் இருப்பது; பற்றுதலின் எந்த வளர்ச்சியையும்
...more
பிச்சைக்காரன் செல்வத்தைத் துறக்க முடியாது. ஒரு மனிதன், என் வியாபாரம் நசிந்து விட்டது; என் மனைவி என்னை விட்டுப் போய்விட்டாள்; நான் எல்லாவற்றையும் துறந்து விட்டு ஓர் ஆசிரமத்தில் சேரப் போகிறேன், என்று புலம்பினால் அவன் எந்த தியாகத்தைச் செய்ததாகக் குறிப்பிடுகிறான்? பணத்தையோ அன்பையோ அவன் துறக்கவில்லை. அவை இவனைத் துறந்து விட்டன! என்பார் குருதேவர்.
எனக் காண்பிப்பதற்கு நான் முயன்று கொண்டிருக்கிறேன். நானும் மற்ற எந்த ஒரு சாதாரண மனிதனைப் போலவே தவறிழைக்கக் கூடிய ஓர் எளிய பிறவிதான். இருந்தாலும் என்னுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளவும் என் பாதையைத் திருத்திக் கொள்ளவும் போதுமான அளவு தன்னடக்கம் என்னிடம் உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
எனக்கு கடவுளிடத்திலும் அவனுடைய கருணையிலும் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதுடன் சத்தியம், அன்பு இவைகளிடத்தில் தணியாத ஆர்வம் உண்டு என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒவ்வொருவரிடத்திலும் மறைந்திருப்பது அவைதான் அல்லவா? அவர் தொடர்ந்தார்: நாம் கண்ணால் காணும் இவ்வுலகில் புதியவற்றைக் கண்டு பிடிக்கலாம், உண்டு பண்ணலாம் என்றால் ஆன்மீக விஷயங்களில் திவாலாகி விட்டோம் என பறை சாற்ற வேண்டுமா என்ன? விதி விலக்குகளை அதிகமாக்கி அவற்றை விதியாக ஆக்கிவிடுவது அசாத்தியமானதா, என்ன? மனிதன், மனிதனாகத்தான் இருக்க வேண்டுமென்றால், அவன் எப்பொழுதும் முதலில் மிருகமாக இருந்து பின்னால்தான் மனிதனாக ஆக வேண்டுமா?17
நான் சிரித்து மறுபடியும் என் வேண்டுகோளைத் திரும்பக் கூறினேன். தந்தையே, சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் தன் அழகான கைகளை இல்லை என்ற முறையில் விரித்தவாறு சைகை செய்தார். என் உணர்வு என்றுமே இந்த நிரந்தரமல்லாத உடலுடன் ஒன்றியதில்லை. நான்2 இவ்வுலகிற்கு வருமுன்பே, தந்தையே நான் அதுவாகவே இருந்தேன். சிறு பெண்ணாக இருந்தபோதும், நான் அதுவாகவே இருந்தேன். நான் வயதான பெண்ணாக வளர்ந்தேன். அப்பொழுதும் நான் அதுவாகவே இருந்தேன். நான் எந்தக் குடும்பத்தில் பிறந்தேனோ அவர்கள் இந்த உடலுக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்த பொழுதும் நான் அதுவாகவே இருந்தேன். மேலும் தந்தையே, தங்கள் முன்னால் இப்பொழுதும் நான் அதுவாகவே இருக்கிறேன். இனி
...more