More on this book
Community
Kindle Notes & Highlights
அனைத்து மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கனவுகளுடன் நான் என் ராஜாங்கத்தைக் கட்டியெழுப்பியிருந்தேன். அந்தக் கனவை நினைத்து இப்போது நான் சிரிக்க விரும்பினேன். அது சிரிக்கத்தக்க ஒரு விஷயம்தான்.
தோற்க வேண்டும் என்று எனக்கு விதிக்கப்பட்டிருந்ததா? அது அப்போது எனக்குத் தெரியவில்லை, ஆனால் வேறொருவனின் தலைவிதியை நிறைவேற்றுவதற்காக நான் பிறந்திருந்தேன்.
கற்றவர்களும் சிறப்புரிமை பெற்றவர்களும் எந்த விஷயங்கள் சரி என்று கருதினரோ, அவற்றிலிருந்து எங்களது நீதியுணர்வு மாறுபட்டிருந்தது. எங்கள் நெறிமுறைகளை நாங்களே தீர்மானித்தோம். எங்கள் உரிமைகளை எங்கள் சொந்த வழியில் நாங்களே வரையறை செய்து கொண்டோம். ஒருவரது தேவைக்குப் பொருத்தமாக இருக்கும் விதத்தில் உண்மையை வளைக்க முடியும் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம்.
அக்கடவுள்களின் பெயரைச் சொல்லிக் கொள்ளையடித்த அவர்களது பிரதிநிதிகளையும் நாங்கள் பார்த்தோம்.
‘இதுதான் புத்திசாலித்தனம்’ என்று உலகம் வரையறுத்து வைத்திருந்த புத்திசாலித்தனமும் என்னிடம் இருக்கவில்லை.
எப்படிப் பார்த்தாலும், வேதங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், அவற்றை எந்த வழியில் கூறினாலும் அது ஒரு பொருட்டே அல்ல என்றும் நான் நினைத்தேன்.
உலகைக் கட்டுப்படுத்திய ஆற்றல்களைத் தாங்கள் கட்டுப்படுத்தியதாக அவர்கள் முழங்கினர். இதில் வேடிக்கை என்னவென்றால், பயனுள்ள ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்த தச்சர்கள், கொத்தனார்கள், விவசாயிகள் போன்ற பெரும்பான்மை மக்கள், கடும் வெயிலில், தங்கள் முகங்களிலிருந்து வியர்வை வழிந்து கொண்டிருக்க, கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, எதையோ உளறிக் கொண்டு, தவளைகளைப்போல கொக்கரித்துக் கொண்டிருந்த இந்தக் கோமாளிகளுக்குக் கீழான நிலையை அடைந்துவிட்டிருந்தனர்.
ஆனால், சமுதாயத்தின் சிக்கலும் அர்த்தமற்றச் சடங்குகளும் அதிகரித்தபோது, சமுதாயத்தை, பிராமணர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துவங்கினர்.
உதயமாகும் சூரியனின் அழகில் என்னால் மகிழ்ச்சியைக் காண முடியாவிட்டால், ஒரு சிறு கைக்குழந்தையின் சிரிப்பில் பேரின்பத்தை என்னால் உணர முடியாவிட்டால், இசை எனும் மகிழ்ச்சியில் என்னால் மூழ்க முடியாமல் போனால், வாழ்வதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?
பயம் என்ற ஒன்று இல்லை என்று மறுக்கும் அளவுக்கு நான் பயத்தைக் கண்டு பயப்படவில்லை
ஒரு பிராமணனாகப் பிறப்பதுதான் உச்சகட்ட வெகுமதி என்றால், மீண்டும் பிறப்பது குறித்த பயத்தின் காரணமாக நான் மரணம் எய்தக்கூட மறுக்கக்கூடும்.
பண்டைய அசுர அரசர்களுக்கு ராஜ்யத்திற்கான தெய்வீக உரிமை இருக்கவில்லை. அரசர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்கள். நகரத்திலேயே மிக அதிகத் திறமை வாய்ந்த, மிகப் பெரிய வீரர்கள் அவர்கள், அவ்வளவுதான்.”