More on this book
Community
Kindle Notes & Highlights
Read between
February 18 - July 7, 2021
விரைவில், பல சுவாரசியமான எண்ணங்கள் ஒன்றோடொன்று கலந்தன. முதலில் அறிவு கைவரப் பெற்ற பிரம்மா படைப்பாளராகக் கொண்டாடப்பட்டார். அமைப்புமுறையின் பாதுகாவலராக விஷ்ணு கருதப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஓர் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தைக் குழிதோண்டிப் புதைத்த இந்திரனை விட்டுவிட்டு, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய சிவன், அழிப்பவராகப் பார்க்கப்பட்டார். இந்தியாவின் மூன்று கடவுள்கள், அதாவது, மும்மூர்த்திகள் அவர்கள்தாம். இக்குடும்பங்களின் முதல் உறுப்பினர்களும் கடவுள்களாகக் கொண்டாடப்பட்டனர்.
எனக்குக் கீழே உள்ள ஒருவனின் யோசனையைத் திருடி, அதற்கு நான் உரிமை கொண்டாடுவது எனக்கு மிகச் சுலபமாக வருவதற்குக் காரணம், என்னோடு பிறந்த தலைமைத்துவப் பண்புகளாக இருக்கலாம். அவை இன்னும் ஆரம்ப நிலையில் இருந்ததால், அந்த யோசனைகள் யாருடையவை என்பது எனக்கு நினைவிருந்தது. பின்னாளில், நான் ஓர் உண்மையான தலைவனாக ஆனபோது, அனைத்து நல்ல யோசனைகளும் என்னிடமிருந்து வெளிவந்தன என்பதிலும், மோசமான மற்றும் முட்டாள்தனமான யோசனைகள் வேறு யாருக்கோ சொந்தமானவை என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்.
அவன் என்னையும் மற்றவர்களையும் மிகச் சிறியவர்களாக உணரச் செய்தான். தான் மட்டுமே சிறந்த பண்புநலன்களின் உறைவிடம் என்பதுபோலவும், நாங்களெல்லாம் வேசி மகன்கள் என்பதுபோலவும் அவன் நடந்து கொண்டான். இது, அளவுக்கதிகமாகவே தத்துவப் புத்தகங்களைப் படித்ததால் ஏற்பட்ட இன்னல்போலும். நீங்கள் அவற்றை ஏராளமாகப் படித்தீர்கள் என்றால், உங்களுக்கு உங்கள்மேல் எந்த நம்பிக்கையும் ஏற்படாது.
அவனது பொய்யான அகந்தைக்காகவும், உலகத்தாருக்குத் தனது நல்லொழுக்கத்தை நிரூபிக்கத் துடித்த அவனது ஆர்வத்திற்காகவும் ராமனை நான் வெறுத்தேன்.
கடவுள் உங்களுக்குள் இருப்பதாகக் கூறுங்கள், அல்லது, அதைவிடச் சிறப்பாக, நீங்கள்தான் கடவுள் என்று கூறுங்கள். அப்போது நீங்கள் செய்யும் எதுவொன்றும், நீங்கள் செய்யும் எந்தவோர் அதர்மமும் தெய்வீக நாடகம் என்று ஏற்றுக் கொள்ளப்படும்.”
நான் செய்திருந்த பலவற்றை அவன் செய்யாமல் போயிருப்பான், ஆனால் அப்படிச் செய்திருந்தால், அவனால் பிரஹஸ்தனாக இருந்திருக்க முடியாது, என்னால் ராவணனாக இருந்திருக்க முடியாது.
பழைய நண்பர்கள் இறந்து போகும்போது, அவர்கள் உங்கள் வாழ்விலிருந்து எதையேனும் தங்களுடன் எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
நீ உன்னுடைய லட்சியங்களை மதுவிலும் போதைப் பொருட்களிலும் மூழ்கடித்தாய். ஆனால் நான் உட்கொண்ட அதிகாரம் எனும் போதைப் பொருள், நீ உட்கொண்டிருந்த எதுவொன்றையும்விட அதிக வீரியம் வாய்ந்ததாக இருந்தது.
யாரோ ஒருவன் மகத்துவத்தையும் தெய்வீக நிலையையும் அடைவதற்கு அவன் ஏறிச் சென்ற ஒரு படிக்கல்லாக நான் ஆனேன்.
நானோ அல்லது ராமனோ நாளை இறந்தாலும்கூட, உலகம் எப்போதும்போலச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை நான் வெறுமனே ஒரு முக்கியமற்றப் புள்ளி மட்டுமே எனும்போது, நான் மட்டுமே எனக்கு முக்கியமானவனாக இருந்தேன். நான் மரணமடையும்போது, எனக்கான அனைத்தும் என்னுடன் சேர்ந்து மடிந்துவிடும். என்னுடைய மரணத்திற்குப் பிறகு என் மக்களுக்கு நிகழவிருந்த எதுவும் என் பிரச்சனையல்ல.