உனது மரணம் ஒரு புழுவின் மரணத்தைவிடக் குறைவான மதிப்புக் கொண்டதுதான். ஒரு புழு ஒரு பறவைக்கு உணவாகிறது அல்லது இந்த மண்ணுக்கு உரமாகிறது. ஆனால் நீ இறந்தால், உன் உடல் எரிக்கப்படும், அந்தப் புகை வளி மண்டலத்தில் சென்று கலக்கும். இயற்கையைப் பொறுத்தவரை, உனது போராட்டங்களும் துன்பங்களும் வெற்றிகளும் பிறப்பும் மரணமும் அற்ப நிகழ்வுகளே. அவை, காலச் சக்கரங்களின் கீழே நொறுக்கப்படுகின்ற சிறு கற்களே. நீ வாழ்ந்தால், தவிர்க்க முடியாத உனது மரணத்தை நீ ஒருநாள் தள்ளிப் போடுகிறாய். நீ இறந்து விட்டாலும் இப்பிரபஞ்சம் தொடர்ந்து இப்படியேதான் இருக்கும்.