எனக்காக நான் பரிதாபப்பட்டேன். எந்த வகையான திருமணம் இது? இதில் அன்போ, காதல் களியாட்டமோ, நிலவுக்கு அடியில் கிசுகிசுப்புகளோ, திருட்டுத்தனமான முத்தங்களோ இருக்கவில்லை. பெயரளவுக்கு மட்டுமே இது திருமணமாக இருந்தது. எனது வளமான கற்பனையால்கூட மண்டோதரியுடன் ஒரு காதல்மயமான உறவை உருவாக்க முடியவில்லை.