விந்திய மலைத்தொடரின் தெற்கு அடிவாரங்களில், அரைச்சாதியினனான வாலி ஆண்டு வந்தான். பேராற்றல் வாய்ந்த அவனை எல்லோரும் வானர அரசன் என்று இழிவாக அழைத்தனர். அவனது மக்கள் வானரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அசுர மற்றும் தேவ இனங்களின் கலப்பு அவர்கள். ஆனால் இரு இனங்களுமே அவர்களை வெறுத்து ஒதுக்கி வைத்தன. வானர இனத்தோருக்கு இடையேயான சச்சரவுகளைத் தகர்த்து, வானர இனத்தை வாலி ஒன்றுசேர்க்கும்வரை, அவர்கள் அவ்விரு நாகரீகங்களின் விளிம்பின்மீது வாழ்க்கை நடத்தினர். கிஷ்கிந்தையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வானர இனத்தினர், வடக்கிலிருந்த தேவ சாம்ராஜ்யங்களுக்கும் தெற்கிலிருந்த அசுர சாம்ராஜ்யங்களுக்கும் ஓர் அச்சுறுத்தலாக
...more