அரசி தரையில் காறி உமிழ்ந்துவிட்டு, அரசனைப் பார்த்து, “புனித விதிகள் . . . தர்மம் . . . ஒரு சிறுவனைக் கொலை செய்வதன் மூலம் அவனிடமிருந்து உன் தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ஒரு சிறு குழந்தை கூறிய ஒருசில சமஸ்கிருத வார்த்தைகளைக் கண்டு உன் தர்மம் பயப்படுகிறது என்றால், உன்னால் சிந்திக்க முடிந்தால், நீ எப்படிப்பட்ட தர்மத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நினைத்துப் பார். உன்னைக் கட்டுப்படுத்துகின்ற கடிவாளம் யாருடைய கைகளில் இருக்கிறது என்று யோசித்துப் பார் . . .” என்று கத்தினாள்.