எங்களிடம் இருந்ததைவிட அதிகமாக அவரிடம் எதுவும் இருந்துவிடவில்லை. என்னிடம் இல்லாத எது ராவணனிடம் இருந்தது? ஆட்சி செய்வதற்குப் பிறந்தவன் தான் என்ற அமைதியான தன்னம்பிக்கையா? வெறும் அதிர்ஷ்டமா? அல்லது அவர் புத்திசாலியாகவும் ஈவு இரக்கமற்றவராகவும் இருந்தது அதற்குக் காரணமா? அவர் ஈவு இரக்கமற்றவராக இருந்ததுதான் காரணம் என்றால், ருத்ராக்கன்தான் வேறு எவரொருவரைவிடவும் அதிகக் கடுமையானவனாகவும் கருணையற்றவனாகவும் இருந்தான். புத்திசாலித்தனமான உத்தியுடன்கூடிய நீண்டகாலச் சிந்தனைதான் அதற்கான விடை என்றால், பிரஹஸ்தனுக்கு யாரும் அதில் ஈடாக மாட்டார்கள். வீரம்தான் அதற்குக் காரணம் என்றால், வீரம் மிக்க அசுரர்கள் எண்ணற்றோர்
...more