“ஓ! அரசர்களுக்கெல்லாம் அரசனே, அசுரர்களின் பேரரசனே . . . என்னைப் பார்த்துவிட்டுப் போக வந்தாயா? ராவணா, உன் நேரத்தை எண்ணிக் கொள். உன்னையும் உன்னுடைய தீய சாம்ராஜ்யத்தையும் ஒழித்துக்கட்டுவதற்காக என் ராமன் வந்திருக்கிறார். உன்னைப் போன்ற ராட்சஸர்களும், நீ உருவாக்கியுள்ள அனைத்தும், நீ பெருமிதம் கொள்ளும் அனைத்தும் விரைவில் சாம்பலாகப் போவது நிச்சயம். என்னை இங்கிருந்து மீட்டுச் செல்வதற்காக என் கணவர் இங்கு வந்துள்ளார். உனது தீய சாம்ராஜ்யம் நிலைகுலைந்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. உன் குடும்பத்தினரின் உயிர்களை நீ மதித்தால், போய் என் கணவரின் பாதங்களில் விழு. ஆனால் நீ அப்படிச் செய்ய மாட்டாய்
...more