ஒரு குழந்தை பிறந்தபோது ஒரு மாமரத்தை நடுவது எங்களது அசுர வழக்கமாக இருந்தது. குழந்தையோடு சேர்ந்து அந்த மரமும் வளர்ந்து, அனைத்து உயிர்களுக்கும் அது தன் கனிகளைக் கொடுத்து, இவ்வுலகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்கியது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகும்போது, அவனும் இதைப்போலவே செய்ய வேண்டும் என்று அவனிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது. அவனது இறுதிப் பயணத்திற்கான நேரம் வந்தபோது, அந்த மரம் தனது இறுதித் தியாகத்தைச் செய்து, தனது தோழனோடு சேர்ந்து, சிதையின் தீயில் கருகிப் புகையாக மாறிக் காற்றோடு காற்றாக மறைந்தது.