“சுயநலத்தைவிட அதிகமாகக் கண்டிக்கத்தக்க விஷயம் வேறொன்றும் இல்லை. தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு மனிதன்தான் எல்லோரையும்விட மிகவும் துரதிர்ஷ்டமானவன். ஒருவன் ஏன் பிறக்கிறான்? வெறுமனே சாப்பிட்டு உடலைப் பருமனாக வளர்ப்பதற்கா? அல்லது சந்ததியினரை உருவாக்கிப் பன்றிகளைப்போல இனப்பெருக்கம் செய்வதற்கா? இந்த அழகான பூமியை உடற்கழிவுகளால் அசுத்தப்படுத்தவும், பிறகு, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவிதமான மாற்றத்தையும் இவ்வுலகில் ஏற்படுத்தாமல் வெறுமனே மடிந்து போவதற்குமா? நம் மக்களை நசுக்கிக் கொண்டிருக்கின்ற இருளில் ஒரு சிறு விளக்கையாவது ஏற்றாமல் போனால் அவனது வாழ்விற்கு என்ன மதிப்பு இருக்கிறது?