இப்போது எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. ஒரு தனிமனிதனின் புகழுக்கான ஓர் அர்த்தமற்ற யுத்தமல்ல இது. எங்களுடைய சகோதர சகோதரிகளையும், எங்கள் மனைவியர் மற்றும் குழந்தைகளையும் ஒரு கொடுங்கோலனின் கைகளிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு யுத்தம் இது. நான் மாலாவைப் பற்றிக் கவலைப்பட்டேன்.