துவக்கத்தில் விபீஷணனை எல்லோரும் விரும்பினர். எல்லோரும் மறந்துவிட்ட, தெருவில் அமைந்த சிவன் கோவில்களையும், கீழ்நிலையில் இருந்த கடவுள்களுக்கான கோவில்களையும் மறுசீரமைக்க அவன் மேற்கொண்ட முயற்சிகளையும், கோவில் நிர்வாகத்தைச் சீரமைக்க அவன் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கண்டு பலர் பிரமித்தனர். ஆனால் விரைவில், அவன் பல சிறிய விஷ்ணு கோவில்களை நிர்மாணித்து, வினோதமான தேவ வழக்கங்களை அறிமுகப்படுத்தத் துவங்கினான். அவன் சில பிராமணர்களையும்கூட அழைத்து வந்தான். அவர்கள் தங்களது கேடுகெட்ட தேவப் பாரம்பரியமான சாதி அமைப்புமுறையை அசுரச் சமுதாயத்திற்குள் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தத் துவங்கினர். விபீஷணனைக் கண்டு பிரமித்த
...more