நான் ஒருசில அடிகள் முன்னே எடுத்து வைத்து, பிறகு திடீரென்று ஆணியடித்தாற்போல நின்றேன். ஒரு தூணின்மீது சாய்ந்து கொண்டு, அதே உணர்ச்சியற்றத் தீவிரமான பார்வையுடன் மண்டோதரி என்னை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் என்ன கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. “போ, போய் அவளது உதடுகளில் முத்தமிடு. வீரதீரச் செயல்களைப் புரிந்த பிறகு, கதாநாயகர்கள் அதைத்தான் செய்வார்கள்.