“அது எத்தனை அசுர வழக்கங்களையும் விதிகளையும் மீறினாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. என் சொந்த வழக்கங்களை நானே உருவாக்குகிறேன். நான் உருவாக்குகின்ற விதிகளின்படியே நான் நடப்பேன். இந்த ஆயிரம் வருடப் பழைய சம்பிரதாயங்கள் எனக்குச் சலிப்பூட்டுகின்றன. நான் என்ன கூறுகிறேன் என்று உனக்கு நிரூபிப்பதற்காக, குபேரன் விட்டுச் சென்றுள்ள இந்த அரியணையின்மீது நான் உட்காரப் போகிறேன். எந்தவிதமான விழாக்களைப் பற்றியும் எனக்கு அக்கறையில்லை. அசுர மூடநம்பிக்கைகளுக்கு எனது ராஜாங்கத்தில் எந்த இடமும் கிடையாது. இது ஒரு புதிய உலகம், ஒரு நவீன உலகம். பழைய இந்தியாவின் பழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் முன்னேற்றத்தை நோக்கிய நமது
“அது எத்தனை அசுர வழக்கங்களையும் விதிகளையும் மீறினாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. என் சொந்த வழக்கங்களை நானே உருவாக்குகிறேன். நான் உருவாக்குகின்ற விதிகளின்படியே நான் நடப்பேன். இந்த ஆயிரம் வருடப் பழைய சம்பிரதாயங்கள் எனக்குச் சலிப்பூட்டுகின்றன. நான் என்ன கூறுகிறேன் என்று உனக்கு நிரூபிப்பதற்காக, குபேரன் விட்டுச் சென்றுள்ள இந்த அரியணையின்மீது நான் உட்காரப் போகிறேன். எந்தவிதமான விழாக்களைப் பற்றியும் எனக்கு அக்கறையில்லை. அசுர மூடநம்பிக்கைகளுக்கு எனது ராஜாங்கத்தில் எந்த இடமும் கிடையாது. இது ஒரு புதிய உலகம், ஒரு நவீன உலகம். பழைய இந்தியாவின் பழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் முன்னேற்றத்தை நோக்கிய நமது செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்கட்டும்.” சூட்டோடு சூடாக, நான் அந்தப் பழைய மர நாற்காலியைத் தூக்கி, அருகிலிருந்த சுவரின்மீது எறிந்தேன். அது ஓர் உரத்தச் சத்தத்துடன் உடைந்தது. அது எனது கருத்தைக் குறிப்பால் உணர்த்தியதுபோல இருந்தது. நான் வேகமாகத் திரும்பி, அரியணையை நோக்கி நடந்தேன். எனது உயர்மட்டக் குழுவினர், அதாவது, எனது மந்திரிகளின் அதிர்ச்சி கலந்த சுவாசம் எனக்குக் கேட்டது. ஏதோ ஒன்றைச் சாதித்த உணர்வுடன் நான் அந்த அரியணையின்மீது அமர்ந்தேன். முதலில் எனக்குச் சிறிது பயமாக இருந்தது, பிறகு ஒரு நடுக்கம் என்னுள் பரவியது. நான் மெதுவாகப் பின்னால் சாய்ந்து அமர்ந்தேன். அரியணையின் கைப்பிடிகள்மீது பதிக்கப்பட்டிருந்த வைரங்களை எனது கைகள் தடவிக் கொடுத்தன. கடலில் இருந்து ஒரு குளிர்ந்த காற்று வீசியது. தெருக்களில் நிகழ்ந்து கொண்டிருந்தவற்றின் சத்தம் அரண்மனைக்குள் கேட்டது. உலகத்தார் நலமாக இருந்தனர். அலங்கார வேலைப்பாடுகளுடன் இருந்த அந்த அரியணையில், ராவணன் தனது முடிசூட்டு விழா நடைபெற்றப் பிறகு அமர்ந்த...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.