எங்களது தர்மம் எளிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது: ‘ஒரு மனிதன் தனது சொல்லுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவன் தனது இதயத்திலிருந்து பேச வேண்டும். தான் தவறு என்று கருதும் எந்தவொரு விஷயத்தையும் அவன் செய்யக்கூடாது. தான் தோற்கப் போவது உறுதி என்ற நிலையிலும்கூட அடுத்தவரை ஏமாற்றக்கூடாது. பெண்கள் மதிக்கப்பட வேண்டும். யாரையும் ஏளனம் செய்யக்கூடாது. நியாயமின்மை இருந்தால், எந்த விலை கொடுத்தாவது அதை நாங்கள் எதிர்த்தாக வேண்டும். பண்டைய அசுரர்கள் அல்லது தேவ ரிஷிகளின் மாபெரும் போதனைகள் எதுவும் எங்களுக்கு ஒருபோதும் தெரிந்திருந்ததில்லை. நாங்கள் எந்தப் பாரம்பரியத்தையும் பின்பற்றவில்லை. நாங்கள்
...more