முதலில் அறிவு கைவரப் பெற்ற பிரம்மா படைப்பாளராகக் கொண்டாடப்பட்டார். அமைப்புமுறையின் பாதுகாவலராக விஷ்ணு கருதப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஓர் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தைக் குழிதோண்டிப் புதைத்த இந்திரனை விட்டுவிட்டு, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய சிவன், அழிப்பவராகப் பார்க்கப்பட்டார். இந்தியாவின் மூன்று கடவுள்கள், அதாவது, மும்மூர்த்திகள் அவர்கள்தாம். இக்குடும்பங்களின் முதல் உறுப்பினர்களும் கடவுள்களாகக் கொண்டாடப்பட்டனர். தேவர்கள் இன்றும் அவர்களை அவ்வாறே போற்றுகின்றனர். நாம் சிவனையும் பிரம்மனையும் கடவுள்களாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தேவர்களின் படைத்தளபதியாகவும், ஒரு தேவ அரசனின் வெறும்
...more