பாரம்பரிய இந்தியத் தத்துவஞானமானது, ஒருவர் தனது அடிப்படை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதோடு அறிவு மட்டுமே ஒப்புயர்வற்றது என்றும் அது முழங்குகிறது. கோபம், கர்வம், பொறாமை, மகிழ்ச்சி, வருத்தம், பயம், சுயநலம், தணியாத விருப்பம், லட்சியம் ஆகிய ஒன்பது அடிப்படை உணர்ச்சிகளை வெறுத்து ஒதுக்குமாறு மகாபலிப் பேரரசன் ராவணனுக்கு போதிக்கிறான். அறிவு மட்டுமே வணக்கத்துக்கு உரியது என்றும் அவன் எடுத்துரைக்கிறான்.