Murthy Thangarasu

33%
Flag icon
“நாம் இந்தத் தீவிற்குள் காலெடுத்து வைப்பதற்கு முன்பாகவே உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டிருந்தது உனக்கு மறந்து போய்விட்டதா? அடுத்த முறை நீ இந்தக் குழுவைப் பற்றிப் பேசுவது என் காதில் விழுந்தால், அடுத்தக் கப்பலைப் பிடித்து இந்தியாவிற்குச் சென்று, அந்த வயதான பேரரசரின் மடத்தனமான முயற்சிகளில் நீ கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம். அதாவது, நான் நல்ல மனநிலையில் இருந்தால் அது உனக்குச் சாத்தியம். நான் மோசமான மனநிலையில் இருந்தால், நடப்பதே வேறு. அரண்மனையைச் சுற்றி அமைந்துள்ள அகழியில் இருக்கும் முதலைகளுக்கு நீ உணவாவாய். நான் கூறுவது உனக்குப் புரிகிறதா?”