வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு மட்டுமே பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் விஷயங்களில் நான் ஓர் ஒழுங்கைப் பார்த்தேன். இரவும் பகலும் மாறி மாறி வருகின்ற விதத்தையும், பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்று உயிரினங்களிடம் நிலவும் ஒரு சுழற்சியையும் அதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். ஆனாலும், பல விஷயங்களை வெறும் விதி என்று மட்டுமே நம்மால் விளக்க முடியும்.