நான் எனது உயர்மட்டக் குழுவினரிடம் சென்று, எனது யோசனையை, அதாவது, பத்ரனின் யோசனையை முன்வைத்தேன். ஆனால் அது என் யோசனை என்பதுபோல இப்போது நான் சிந்திக்கத் துவங்கியிருந்தேன். எனக்குக் கீழே உள்ள ஒருவனின் யோசனையைத் திருடி, அதற்கு நான் உரிமை கொண்டாடுவது எனக்கு மிகச் சுலபமாக வருவதற்குக் காரணம், என்னோடு பிறந்த தலைமைத்துவப் பண்புகளாக இருக்கலாம். அவை இன்னும் ஆரம்ப நிலையில் இருந்ததால், அந்த யோசனைகள் யாருடையவை என்பது எனக்கு நினைவிருந்தது. பின்னாளில், நான் ஓர் உண்மையான தலைவனாக ஆனபோது, அனைத்து நல்ல யோசனைகளும் என்னிடமிருந்து வெளிவந்தன என்பதிலும், மோசமான மற்றும் முட்டாள்தனமான யோசனைகள் வேறு யாருக்கோ சொந்தமானவை
...more