வணிகக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வருகின்ற ஒரு புத்திசாலி இளைஞரைக் கண்டுபிடித்து, என்றேனும் ஒருநாள் தங்கள் நிறுவனத்தைத் தலைமையேற்று நடத்துவதற்கு அவர்கள் அவரைத் தயார்படுத்துகின்றனர். இந்த இளம் ஊழியர்கள் எந்தவொரு குறிப்பிட்டத் துறையிலும் நிபுணத்துவம் பெறுவதில்லை. வியாபார அமைப்புமுறையின் அனைத்து அம்சங்களையும் கற்றுக் கொள்வதற்காக அவர்கள் ஒவ்வொரு துறைக்கும் அனுப்பப்படுகின்றனர். பணக்காரர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளை இவ்வாறுதான் தயார்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், வியாபாரத்தை நடத்துவது குறித்த அறிவும், பல்வேறு துறைகளுக்கு இடையேயான தொடர்பு குறித்த ஒட்டுமொத்த அறிவும்
...more

