முதலீடு செய்வதிலுள்ள விதிகளையும் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு உங்கள் சொத்துக்கள் பகுதியை நீங்கள் கட்டியெழுப்பத் துவங்கும்போது, இது நீங்கள் இதுவரை விளையாடியிருக்காத ஒரு குதூகலமான விளையாட்டு என்பதைக் காண்பீர்கள். சில சமயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், சில சமயம் கற்றுக் கொள்வீர்கள். ஆனால் எப்போதும் குதூகலத்தை அனுபவியுங்கள். பெரும்பாலான மக்கள் ஒருபோதும் வெற்றி பெறாததற்குக் காரணம், தோல்வி குறித்த பயம் அவர்களுக்கு இருப்பதுதான். பள்ளிகளைக் கண்டு நான் நகைப்பது இதனால்தான். தவறுகள் மோசமானவை என்று நாம் பள்ளிகளில் கற்கிறோம். தவறுகள் செய்யும்போது அங்கு நாம் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் கற்பதற்கு மனிதர்கள்
முதலீடு செய்வதிலுள்ள விதிகளையும் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு உங்கள் சொத்துக்கள் பகுதியை நீங்கள் கட்டியெழுப்பத் துவங்கும்போது, இது நீங்கள் இதுவரை விளையாடியிருக்காத ஒரு குதூகலமான விளையாட்டு என்பதைக் காண்பீர்கள். சில சமயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், சில சமயம் கற்றுக் கொள்வீர்கள். ஆனால் எப்போதும் குதூகலத்தை அனுபவியுங்கள். பெரும்பாலான மக்கள் ஒருபோதும் வெற்றி பெறாததற்குக் காரணம், தோல்வி குறித்த பயம் அவர்களுக்கு இருப்பதுதான். பள்ளிகளைக் கண்டு நான் நகைப்பது இதனால்தான். தவறுகள் மோசமானவை என்று நாம் பள்ளிகளில் கற்கிறோம். தவறுகள் செய்யும்போது அங்கு நாம் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் கற்பதற்கு மனிதர்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் பார்த்தால், நாம் தவறுகள் மூலமாகத்தான் கற்றுக் கொள்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கீழே விழுவதன் மூலமாகத்தான் நாம் நடப்பதற்குக் கற்றுக் கொள்கிறோம். நாம் ஒருபோதும் கீழே விழவில்லை என்றால், நாம் ஒருபோதும் நடக்க மாட்டோம். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போதும் இதேபோலத்தான். நான் கீழே விழுந்தபோது ஏற்பட்டத் தழும்புகள் என்னுடைய கால்மூட்டுகளில் இன்னும் இருக்கின்றன, ஆனால் எதையும் யோசிக்காமல் இன்று என்னால் சைக்கிள் ஓட்ட முடியும். பணக்காரர் ஆவதற்கும் இது பொருந்தும். வெற்றியாளர்கள் தோற்பதற்கு அஞ்சுவதில்லை, ஆனால் தோல்வியாளர்கள் அஞ்சுகின்றனர். தோல்வியானது வெற்றிச் செயல்முறையின் ஒரு பகுதியாகும். தோல்வியைத் தவிர்க்கும் மக்கள் வெற்றியையும் தவிர்க்கின்றனர். பணத்தை நான் எனது டென்னிஸ் விளையாட்டைப்போலவே பார்க்கிறேன். நான் கடினமாக உழைக்கிறேன், தவறுகள் செய்கிறேன், அவற்றைத் திருத்திக் கொள்கிறேன், இன்னும் அதிகத் தவறுகள் செய்கிறேன், திருத்துகிறேன், சிறப்படைகிறேன். ...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.