பணம் என்பது ஒரு யோசனை மட்டுமே. நீங்கள் அதிகப் பணத்தை விரும்பினால், வெறுமனே உங்கள் சிந்தனையை மாற்றுங்கள். சுயமாக முன்னேறிய ஒவ்வொருவரும் ஒரு யோசனையைக் கொண்டு சிறிய அளவில்தான் துவக்கினர். பிறகு, அதைப் பெரிய ஒன்றாக மாற்றினர். முதலீட்டிற்கும் இது பொருந்தும். ஒன்றைத் துவக்கி அதைப் பெரிதாக வளர்ப்பதற்கு ஒருசில டாலர்கள் மட்டுமே தேவை. தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு பெரிய முதலீட்டைத் துரத்திக் கொண்டு இருக்கின்ற பலரை நானறிவேன். அதேபோல், ஒரு பெரிய முதலீட்டைச் செய்வதற்காக ஏராளமான பணத்தைச் சம்பாதிப்பதற்குத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகின்ற பலரையும் எனக்குத் தெரியும். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது
...more

