"கற்றுக் கொடுங்கள், அப்போது நீங்கள் பெறுவீர்கள்," என்று நான் கூறுவது அதனால்தான். கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு நான் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொடுக்கிறேனோ, நான் அவ்வளவு அதிகமாகக் கற்கிறேன் என்பதை நான் கண்டுகொண்டுள்ளேன். நீங்கள் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொள்ள விரும்பினால், அதை வேறொருவருக்குக் கற்றுக் கொடுங்கள். ஏராளமான புதிய யோசனைகள் உங்களை வந்தடையும்.

