உங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் உங்களால் கொண்டுவர முடியவில்லை என்றால், பணக்காரராக ஆவதற்கு முயற்சிக்காதீர்கள். முதலீடு செய்து, பணத்தை உருவாக்கி, இறுதியில் அதை இழப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. லாட்டரிக் குலுக்கலில் கோடிக்கணக்கான டாலர்கள் பரிசு பெற்றவர்கள் விரைவில் ஆண்டிகளாக ஆவதற்கு அவர்களிடம் சுயஒழுங்கு இல்லாததுதான் காரணம். ஓர் ஊதிய உயர்வு கிடைத்தவுடனேயே ஒரு புதிய கார் வாங்குவதோ அல்லது ஓர் உல்லாசப் பயணம் மேற்கொள்வதோகூட சுயஒழுங்கின்மையால்தான்.

