"ஒரு மணிநேரத்திற்குப் பத்து சென்ட்டுகளுக்கு வேலை பார்ப்பது குறித்து நீ கோபம் கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீ கோபப்படாமல், வெறுமனே அதை ஏற்றுக் கொண்டிருந்தால், என்னால் உனக்குக் கற்றுக் கொடுக்க முடியாது என்று நான் கூற வேண்டியிருந்திருக்கும். உண்மையாகக் கற்றுக் கொள்வதற்கு ஆற்றலும், ஆழ்விருப்பமும், கொழுந்துவிட்டெரியும் ஆசையும் இருக்க வேண்டும். கோபம் என்பது அச்சூத்திரத்தின் ஒரு பெரும் பகுதி. ஏனெனில், கோபமும் விருப்பமும் இணைந்ததுதான் ஆழ்விருப்பம். பணம் என்று வரும்போது, பெரும்பாலான மக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ள விரும்புகின்றனர். எனவே ஆழ்விருப்பம் அவர்களை வழிநடத்துவதில்லை. பயம்தான் அவர்களை
...more

