உங்களது சொந்த வியாபாரத்தைத் துவக்குவதற்குத் தேவையான மூன்று முக்கிய நிர்வாகத் திறமைகள் இவை: • பண வரவு-செலவு நிர்வாகம் • மக்கள் நிர்வாகம் • தனிப்பட்ட நேர நிர்வாகம் இந்த மூன்று நிர்வாகத் திறமைகளும் தொழில்முனைவோருக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே தேவையானவைதான். ஒரு தனிநபராகவோ, அல்லது ஒரு குடும்பம், ஒரு வியாபாரம், ஒரு தொண்டு நிறுவனம், ஒரு நகரம் அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதியாகவோ நீங்கள் வாழும் விதத்தில் இந்த மூன்று நிர்வாகத் திறமைகளும் அதிக அர்த்தம் வாய்ந்தவையாகப் பரிணமிக்கும்.

