வெறுமனே ஒரு முதலீட்டில் உங்கள் பணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அது பதிலீட்டைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதுதான் சூதாட்டம். எந்தவொரு விஷயத்திலும் உங்களது நுட்பமான அறிவையும் அந்த விஷயத்தின்மீதுள்ள ஆர்வத்தையும் பயன்படுத்தி, அதிலுள்ள ஆபத்தைக் குறைப்பதுதான் இங்கு முக்கியம். ஆபத்து எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். பொருளாதார அறிவுதான் உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, ஒரு நபருக்கு சவாலாக உள்ள ஒரு விஷயம் இன்னொருவருக்கு அவ்வளவு சவாலானதாக இருக்காது.

