பயம்தான் சம்பளத்திற்காக ஒரு வேலையில் இருக்கும்படி பெரும்பாலான மக்களைத் தூண்டுகிறது என்பதை மட்டும் நீ தெரிந்து கொள். தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பயம், வேலையிலிருந்து நீக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம், போதுமான பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மீண்டும் முதலிலிருந்து துவக்க வேண்டியது குறித்த பயம் ஆகியவற்றைக் கூறலாம். ஒரு

