Rich Dad Poor Dad (Tamil)
Rate it:
Read between March 24 - April 20, 2022
4%
Flag icon
"ஏழையாக இருப்பதற்கும் நொடிந்து போயிருப்பதற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. நொடிந்து போயிருப்பது தற்காலிகமானது, ஏழையாக இருப்பது நிரந்தரமானது," என்று அவர் கூறுவார்.
Vairamayil liked this
12%
Flag icon
பெரும்பாலான சமயங்களில், வாழ்க்கை உன்னிடம் பேசுவதில்லை. அது வெறுமனே உன்னை அங்குமிங்கும் தள்ளிவிடுகிறது. அந்த உந்துதல் ஒவ்வொன்றின் மூலமாக, 'விழித்தெழு! நீ கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது,' என்று வாழ்க்கை உன்னிடம் கூறுகிறது,"
13%
Flag icon
தங்களைத் தவிர உலகிலுள்ள மற்ற அனைவரும் மாற வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். நான் ஒரு விஷயத்தை உன்னிடம் கூற விரும்புகிறேன். மற்றவர்களை மாற்றுவதைவிட உன்னை நீ மாற்றிக் கொள்வது மிகவும் சுலபம்," என்று கூறினார்.
14%
Flag icon
ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். பணக்காரர்கள் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்கின்றனர்.
14%
Flag icon
"ஒரு மணிநேரத்திற்குப் பத்து சென்ட்டுகளுக்கு வேலை பார்ப்பது குறித்து நீ கோபம் கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீ கோபப்படாமல், வெறுமனே அதை ஏற்றுக் கொண்டிருந்தால், என்னால் உனக்குக் கற்றுக் கொடுக்க முடியாது என்று நான் கூற வேண்டியிருந்திருக்கும். உண்மையாகக் கற்றுக் கொள்வதற்கு ஆற்றலும், ஆழ்விருப்பமும், கொழுந்துவிட்டெரியும் ஆசையும் இருக்க வேண்டும். கோபம் என்பது அச்சூத்திரத்தின் ஒரு பெரும் பகுதி. ஏனெனில், கோபமும் விருப்பமும் இணைந்ததுதான் ஆழ்விருப்பம். பணம் என்று வரும்போது, பெரும்பாலான மக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ள விரும்புகின்றனர். எனவே ஆழ்விருப்பம் அவர்களை வழிநடத்துவதில்லை. பயம்தான் அவர்களை ...more
14%
Flag icon
பயம்தான் சம்பளத்திற்காக ஒரு வேலையில் இருக்கும்படி பெரும்பாலான மக்களைத் தூண்டுகிறது என்பதை மட்டும் நீ தெரிந்து கொள். தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பயம், வேலையிலிருந்து நீக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம், போதுமான பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மீண்டும் முதலிலிருந்து துவக்க வேண்டியது குறித்த பயம் ஆகியவற்றைக் கூறலாம். ஒரு
23%
Flag icon
சிந்திப்பதற்கு உன்னுடைய உணர்ச்சிகளைப் பயன்படுத்து, உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திக்காதே.
25%
Flag icon
நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. எவ்வளவு பணத்தைத் தக்க வைத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
28%
Flag icon
"பணக்காரர்கள் சொத்துக்களைக் கைவசப்படுத்துகின்றனர். ஏழைகளும் நடுத்தர வர்க்கத்து மக்களும், தாங்கள் சொத்துக்கள் என்று கருதுகின்ற கடன்களைக் கைவசப்படுத்துகின்றனர்,"
29%
Flag icon
ஒரு சொத்து என் சட்டைப் பைக்குள் பணத்தைப் போடுகிறது. ஒரு கடன் என் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுக்கிறது.
30%
Flag icon
அதிகப் பணம் பிரச்சனையைத் தீர்க்காது. வாஸ்தவத்தில், அது பிரச்சனையை அதிகரிக்கக்கூடும். அது மனிதர்களிடமுள்ள பெரும் குறைகளை வெளிப்படுத்தி, நமக்குத் தெரியாத விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதனால்தால், வாயிலாகவோ,. ஊதிய உயர்வு அல்லது லாட்டரிக் குலுக்கலில் பரிசு கிடைப்பதன் வாயிலாகவோ திடீரென்று ஏராளமான பணத்தைக் கைவசப்படுத்தும் மக்கள், விரைவில் அந்தப் பணத்தையெல்லாம் இழந்து தங்கள் பழைய நிலைமைக்குச் சென்றுவிடுகின்றனர். பணம் வெறுமனே உங்கள் தலைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பணப் பெயர்ச்சிப் பாணியை வலியுறுத்துகிறது, அவ்வளவுதான். கிடைக்கும் பணத்தையெல்லாம் செலவழிப்பது உங்கள் பாணியாக இருந்தால், பண ...more
57%
Flag icon
வெறுமனே ஒரு முதலீட்டில் உங்கள் பணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அது பதிலீட்டைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதுதான் சூதாட்டம். எந்தவொரு விஷயத்திலும் உங்களது நுட்பமான அறிவையும் அந்த விஷயத்தின்மீதுள்ள ஆர்வத்தையும் பயன்படுத்தி, அதிலுள்ள ஆபத்தைக் குறைப்பதுதான் இங்கு முக்கியம். ஆபத்து எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். பொருளாதார அறிவுதான் உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, ஒரு நபருக்கு சவாலாக உள்ள ஒரு விஷயம் இன்னொருவருக்கு அவ்வளவு சவாலானதாக இருக்காது.
58%
Flag icon
பங்குகள், வீடுமனைகள், அல்லது பிற சந்தைகளில் முதலீடு செய்வதைவிட அதிகமாகத் தங்களது பொருளாதார அறிவில் முதலீடு செய்யுமாறு மக்களை நான் தொடர்ந்து ஊக்குவிப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான். நீங்கள் எவ்வளவு அதிக சாமர்த்தியமானவராக நீங்கள் இருக்கிறீர்களோ , சவால்களிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அவ்வளவு அதிகமாக ஏற்படும்.
58%
Flag icon
முதலீடு செய்வதிலுள்ள விதிகளையும் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு உங்கள் சொத்துக்கள் பகுதியை நீங்கள் கட்டியெழுப்பத் துவங்கும்போது, இது நீங்கள் இதுவரை விளையாடியிருக்காத ஒரு குதூகலமான விளையாட்டு என்பதைக் காண்பீர்கள். சில சமயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், சில சமயம் கற்றுக் கொள்வீர்கள். ஆனால் எப்போதும் குதூகலத்தை அனுபவியுங்கள். பெரும்பாலான மக்கள் ஒருபோதும் வெற்றி பெறாததற்குக் காரணம், தோல்வி குறித்த பயம் அவர்களுக்கு இருப்பதுதான். பள்ளிகளைக் கண்டு நான் நகைப்பது இதனால்தான். தவறுகள் மோசமானவை என்று நாம் பள்ளிகளில் கற்கிறோம். தவறுகள் செய்யும்போது அங்கு நாம் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் கற்பதற்கு மனிதர்கள் ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
64%
Flag icon
வேலை தேடுகின்ற இளைஞர்களுக்கு நான் பரிந்துரைப்பது இதைத்தான்: தங்களுக்குக் கிடைக்கக்கூடிய சம்பளத்தை மனத்தில் வைத்து வேலை தேடாமல், தங்களால் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து வேலை தேட வேண்டும். ஒரு குறிப்பிட்டத் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, என்னென்ன திறமைகளைத் தாங்கள் கைவசப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கிடைக்கும் வருவாய்க்குள் வாழ்க்கை நடத்துவதற்கு மக்கள் பழக்கப்பட்டுவிடும்போது, அவர்கள் கூண்டுக் கிளிகளாக ஆகிவிடுகின்றனர். எவ்வளவுதான் சிறகடித்துப் பறக்க முயற்சித்தாலும், அவர்களுக்கு விடிவே இருப்பதில்லை. அவர்கள் அந்தக் கூண்டிற்குள்ளேயே ...more
66%
Flag icon
நான் கற்றுக் கொடுக்கும் வகுப்புகளில், "மெக்டொனால்ட்ஸைவிடச் சிறந்த ஒரு ஹேம்பர்கரை உங்களில் எத்தனைப் பேரால் சமைக்க முடியும்?" என்று நான் கேட்கும்போது, கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் தங்கள் கைகளை உயர்த்துகின்றனர். பிறகு நான் அவர்களிடம், "உங்களால் ஒரு சிறந்த ஹேம்பர்கரைத் தயாரிக்க முடியும் எனும்போது, மெக்டொனால்ட்ஸ் எப்படி உங்களைவிட அதிகப் பணத்தைச் சம்பாதிக்கிறது?" என்று நான் கேட்பேன். வியாபார அமைப்புமுறைகளில் மெக்டொனால்ட்ஸ் தலைசிறந்து விளங்குவதுதான் இதற்குக் காரணம். பல திறமையான மனிதர்கள் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் ஒரு சிறந்த ஹேம்பர்கரை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனரே தவிர, வியாபார ...more
66%
Flag icon
திறமையான ஏழை மக்களால் இவ்வுலகம் நிரம்பியுள்ளது. அவர்கள் ஏழைகளாகவோ அல்லது பொருளாதாரரீதியாகப் போராடிக் கொண்டோ அல்லது தங்கள் திறனுக்குக் குறைவாகப் பணம் சம்பாதித்துக் கொண்டோ இருப்பதற்குக் காரணம், அவர்களுக்குத் தெரிந்துள்ள விஷயங்களால் அல்ல, மாறாக அவர்களுக்குத் தெரியாத விஷயங்களால்தான்.
67%
Flag icon
வணிகக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வருகின்ற ஒரு புத்திசாலி இளைஞரைக் கண்டுபிடித்து, என்றேனும் ஒருநாள் தங்கள் நிறுவனத்தைத் தலைமையேற்று நடத்துவதற்கு அவர்கள் அவரைத் தயார்படுத்துகின்றனர். இந்த இளம் ஊழியர்கள் எந்தவொரு குறிப்பிட்டத் துறையிலும் நிபுணத்துவம் பெறுவதில்லை. வியாபார அமைப்புமுறையின் அனைத்து அம்சங்களையும் கற்றுக் கொள்வதற்காக அவர்கள் ஒவ்வொரு துறைக்கும் அனுப்பப்படுகின்றனர். பணக்காரர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளை இவ்வாறுதான் தயார்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், வியாபாரத்தை நடத்துவது குறித்த அறிவும், பல்வேறு துறைகளுக்கு இடையேயான தொடர்பு குறித்த ஒட்டுமொத்த அறிவும் ...more
69%
Flag icon
"தோற்பதற்கு பயப்படாமல் இருப்பதுதான் வெற்றி."
72%
Flag icon
பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம், முதலீடு என்று வரும்போது, அது ஆபத்தானது என்று கூவிக் கொண்டிருக்கின்ற மக்களால் இவ்வுலகம் நிரம்பி வழிவதுதான். இந்தக் கூக்குரல்கள் ஆற்றல்மிக்கவையாக இருக்கின்றன. ஏனெனில் நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் பயம் ஒளிந்துள்ளது. வதந்திகளும் எதிர்மறையான பேச்சுகளும் நமது சந்தேகங்கள் மற்றும் பயங்கள்மீது தாக்கம் ஏற்படுத்துவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு நமக்கு அதிகத் துணிச்சல் தேவை. ஆனால் பார்ப்பதற்கு மிகவும் மோசமான நேரம்போல் தோன்றுகின்ற சமயம்தான் உண்மையில் பணம் சம்பாதிப்பதற்குச் சிறந்த நேரம் என்பதை ஒரு திறமையான முதலீட்டாளர் அறிவார். நடவடிக்கை எடுப்பதற்கு மற்றவர்கள் ...more
78%
Flag icon
"எனக்குத் தெரிந்த விஷயங்கள் பணத்தை உருவாக்குகின்றன. எனக்குத் தெரியாத விஷயங்கள் எனது பணத்தைத் தொலைத்துவிடுகின்றன. நான் ஆணவத்தோடு இருந்து வந்துள்ள ஒவ்வொரு முறையும், நான் பணத்தை இழந்திருக்கிறேன். ஏனெனில், நான் ஆணவத்துடன் இருக்கும்போது, எனக்குத் தெரியாத விஷயங்கள் முக்கியமானவை அல்ல என்று நான் உண்மையாக நம்புகிறேன்," என்று பணக்காரத் தந்தை என்னிடம் அடிக்கடிக் கூறினார்.
84%
Flag icon
உங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் உங்களால் கொண்டுவர முடியவில்லை என்றால், பணக்காரராக ஆவதற்கு முயற்சிக்காதீர்கள். முதலீடு செய்து, பணத்தை உருவாக்கி, இறுதியில் அதை இழப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. லாட்டரிக் குலுக்கலில் கோடிக்கணக்கான டாலர்கள் பரிசு பெற்றவர்கள் விரைவில் ஆண்டிகளாக ஆவதற்கு அவர்களிடம் சுயஒழுங்கு இல்லாததுதான் காரணம். ஓர் ஊதிய உயர்வு கிடைத்தவுடனேயே ஒரு புதிய கார் வாங்குவதோ அல்லது ஓர் உல்லாசப் பயணம் மேற்கொள்வதோகூட சுயஒழுங்கின்மையால்தான்.
84%
Flag icon
உங்களது சொந்த வியாபாரத்தைத் துவக்குவதற்குத் தேவையான மூன்று முக்கிய நிர்வாகத் திறமைகள் இவை: • பண வரவு-செலவு நிர்வாகம் • மக்கள் நிர்வாகம் • தனிப்பட்ட நேர நிர்வாகம் இந்த மூன்று நிர்வாகத் திறமைகளும் தொழில்முனைவோருக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே தேவையானவைதான். ஒரு தனிநபராகவோ, அல்லது ஒரு குடும்பம், ஒரு வியாபாரம், ஒரு தொண்டு நிறுவனம், ஒரு நகரம் அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதியாகவோ நீங்கள் வாழும் விதத்தில் இந்த மூன்று நிர்வாகத் திறமைகளும் அதிக அர்த்தம் வாய்ந்தவையாகப் பரிணமிக்கும்.
86%
Flag icon
ஏழைகள் மோசமான பழக்கங்களைக் கொண்டுள்ளனர். எடுத்தவுடனேயே சேமிப்பில் கை வைப்பது ஒரு பொதுவான மோசமான பழக்கம். சேமிப்புகள் அதிகப் பணத்தை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியவை, கட்டணங்களைச் செலுத்துவதற்கு உரியவை அல்ல என்பதைப் பணக்காரர்கள் அறிவார்கள்.
91%
Flag icon
"அவர்களால் முடியும் என்றால், என்னாலும் முடியும்." முதலீட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள், அது கடினம் என்பதுபோல் தோன்றச் செய்கின்றனர். மாறாக, அது சுலபம் என்று தோன்றச் செய்கின்ற கதாநாயகர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
91%
Flag icon
"எதையும் பெறுவதற்கான அவசியம் கடவுளுக்கு இல்லை, ஆனால் கொடுப்பதற்கான தேவை மனிதர்களுக்கு உள்ளது."
92%
Flag icon
"கற்றுக் கொடுங்கள், அப்போது நீங்கள் பெறுவீர்கள்," என்று நான் கூறுவது அதனால்தான். கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு நான் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொடுக்கிறேனோ, நான் அவ்வளவு அதிகமாகக் கற்கிறேன் என்பதை நான் கண்டுகொண்டுள்ளேன். நீங்கள் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொள்ள விரும்பினால், அதை வேறொருவருக்குக் கற்றுக் கொடுங்கள். ஏராளமான புதிய யோசனைகள் உங்களை வந்தடையும்.
94%
Flag icon
நுகர்வோர் எப்போதும் ஏழைகளாகவே இருப்பார்கள். பேரங்காடியில் ஒரு பொருள் தள்ளுபடியில் விற்பனையாகும்போது, அவர்கள் ஓடிச் சென்று அப்பொருளை வாங்கிக் குவிப்பார்கள். ஆனால் வீடுமனைகளோ அல்லது பங்குகளோ தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும்போது, அதாவது வீழ்ச்சி ஏற்படும்போது, அதே நுகர்வோர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடிவிடுகிறார்கள். பேரங்காடி தனது பொருட்களின் விலைகளை அதிகரித்தால், இவர்கள் வேறு எங்கேனும் சென்று வாங்குகின்றனர். ஆனால் வீடுமனை விலையோ அல்லது பங்குச் சந்தை விலையோ அதிகரிக்கும்போது, அதே நுகர்வோர் ஓடிச் சென்று அவற்றை வாங்கத் துவங்குகின்றனர். ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் வைத்திடுங்கள்: வாங்குவதில்தான் ...more
96%
Flag icon
பணம் என்பது ஒரு யோசனை மட்டுமே. நீங்கள் அதிகப் பணத்தை விரும்பினால், வெறுமனே உங்கள் சிந்தனையை மாற்றுங்கள். சுயமாக முன்னேறிய ஒவ்வொருவரும் ஒரு யோசனையைக் கொண்டு சிறிய அளவில்தான் துவக்கினர். பிறகு, அதைப் பெரிய ஒன்றாக மாற்றினர். முதலீட்டிற்கும் இது பொருந்தும். ஒன்றைத் துவக்கி அதைப் பெரிதாக வளர்ப்பதற்கு ஒருசில டாலர்கள் மட்டுமே தேவை. தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு பெரிய முதலீட்டைத் துரத்திக் கொண்டு இருக்கின்ற பலரை நானறிவேன். அதேபோல், ஒரு பெரிய முதலீட்டைச் செய்வதற்காக ஏராளமான பணத்தைச் சம்பாதிப்பதற்குத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகின்ற பலரையும் எனக்குத் தெரியும். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ...more
97%
Flag icon
‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’
97%
Flag icon
பாதுகாப்பாக விளையாடாதீர்கள், மாறாக, சாமர்த்தியமாக விளையாடுங்கள்.
97%
Flag icon
"ஊதியத்தின் மூலம் வருகின்ற வருவாயை, விரைவில், சொத்துக்களில் இருந்து வரும் வருமானமாகவும் பங்குகள் மற்றும் பத்திரங்களில் இருந்து வருகின்ற வருமானமாகவும் மாற்றக்கூடிய திறன்தான் செல்வந்தராவதற்கான திறவுகோல்,"
97%
Flag icon
"ஊதியத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தின்மீது அதிக வரிகள் விதிக்கப்படுகின்றன. சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தின்மீது மிகக் குறைந்த வரிகள் விதிக்கப்படுகின்றன. உன் பணம் ஏன் உனக்காகக் கடினமாக உழைக்க வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. நீ கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கம் விதிக்கின்ற வரி, உன் பணம் உனக்காக உழைப்பதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின்மீது விதிக்கப்படுகின்ற வரியைவிட மிகவும் அதிகம்,"