அன்றைக்கு நான் சந்தித்த ஒரு பெரியவர், இதையே வேறு வார்த்தைகளில் பொளேரென்று கேட்டார். “உங்களுக்கே உங்களுக்குனு ஒரு மணி நேரம்கூட ஒதுக்க முடியாத அளவுக்கு, அப்படி என்னதான் பண்ணிக் கிழிக்கிறீங்க?” அவர் கேட்டதும் சரிதான். உண்மையில் யாருக்கும் இங்கே நேரமெல்லாம் இல்லாமல் இல்லை. ஒரு மணி நேரம் விளையாடி என்ன வரப்போகிறது என்ற விட்டேற்றியான மனோபாவமும் சோம்பலும்தான் உண்மையான காரணம். ஆனால், தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, தங்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்கிறவர்கள் மற்றவர்களைவிட உற்சாகத்துடன் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!

