More on this book
Kindle Notes & Highlights
உண்மையில் யார் ஒருவருக்கு எல்லாவற்றையும் முழுமையாகச் செய்ய நேரம் இருக்கிறதோ அவர்தான் பிஸியான மனிதர்.
அர்த்தம் உள்ள பேச்சுகளைவிட அர்த்தம் இல்லாத, ஒரு காரணமும் இல்லாத பேச்சுகள்தான் வீடுகளை, அதன் சுதந்திரத்தை அர்த்தம் உள்ளதாக ஆக்குகின்றன.
வாழ்க்கையைத் தேடிச் செல்பவர்கள் மனிதர்களை நம்பியே தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். படித்தவர்கள்தான் யாரையும் எதையும் நம்பத் தயாராக இல்லை.
“உங்களை மாதிரி ஆளுங்க இப்படி நல்லா நியாயம் பேசுவீங்க. ஆனா, நடப்புல தொழில்வெச்சுப் பொழைக்கிறேன்னு சொன்னா, யாராவது கடன் கொடுக்கிறீங்களா? வௌிநாட்டுக்குப் போறோம்னாதான் கடன் கொடுக்க ஆள் இருக்கு. அப்புறம் இதுதானே வழி. வேறென்ன பண்ண முடியும்?” பொட்டில் அடித்தாற்போலப் பதில் சொன்னார்.
உயிரற்றவைதான், உயிருள்ள மனிதர்களின் உணர்வுகளைச் சுமக்கின்றன. உயிருள்ள மனிதர்கள்தான் தொடர்புகளை இழந்து தொலைந்துபோகிறோம்!
ஒவ்வொன்றையும் தொலைக்கும்போது நம் அறிவு ஒவ்வொரு சமாதானம் சொல்கிறது. ‘நான் என்ன சின்னப் பிள்ளையா?’, ‘இதைச் செய்யிற நேரத்துக்கு ஏதாவது உருப்படியா செய்யலாம்’, ‘இதுக்கு நேரம் ஒதுக்குற அளவுக்கு நான் சும்மா இல்லை... நான் ரொம்ப பிஸி’ என ஏதேதோ காரணங்கள். ஆனால், சிலர் மட்டும் அத்தனை நெருக்கடிகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் மத்தியில் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை விட்டுக்கொடுப்பதே இல்லை.
அன்றைக்கு நான் சந்தித்த ஒரு பெரியவர், இதையே வேறு வார்த்தைகளில் பொளேரென்று கேட்டார். “உங்களுக்கே உங்களுக்குனு ஒரு மணி நேரம்கூட ஒதுக்க முடியாத அளவுக்கு, அப்படி என்னதான் பண்ணிக் கிழிக்கிறீங்க?” அவர் கேட்டதும் சரிதான். உண்மையில் யாருக்கும் இங்கே நேரமெல்லாம் இல்லாமல் இல்லை. ஒரு மணி நேரம் விளையாடி என்ன வரப்போகிறது என்ற விட்டேற்றியான மனோபாவமும் சோம்பலும்தான் உண்மையான காரணம். ஆனால், தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, தங்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்கிறவர்கள் மற்றவர்களைவிட உற்சாகத்துடன் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!
வேலைக்குத்தான் ஓய்வு இருக்கிறது. வாழ்க்கைக்கு இல்லை. பிடித்ததைச் செய்வதில் பிடிவாதமாக இருப்போம்!
பிடித்த விஷயம், பிடித்த இடம், பிடித்த பொருள், பிடித்த விளையாட்டு, பிடித்த சினிமா, பிடித்த பண்டிகை, பிடித்த புத்தகம் என்பதெல்லாம் போய் விட்டது.
பிடித்த போஸ்ட், பிடித்த ரீல், பிடித்த X பதிவு, பிடித்த பாலோயர் என்று மாறிவிட்டது.
சிவபதி இன்னமும் புதிது புதிதாக ஏதோ படிக்கிறான். ஆய்வு மாணவன்போல தேடிக்கொண்டே இருக்கிறான். அவனால் வேலை, குடும்பம் என எல்லாவற்றையும் உற்சாகத்தோடு அணுக முடிகிறது. அவன் திறமையை யாராலும் விலை பேச முடியாது. என்ன விலை வைத்தாலும் அவன் அதைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொள்ளாமல் அவன் தேடலைத் தொடர்கிறான்!
இல்லாதவர்களிடமும் இயலாதவர்களிடமும், அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுகிற மனநிலை ஒரு சுய திருப்தியாகவும், பல்லைக் கடித்துக்கொண்டு நாம் பொறுத்துக்கொண்ட பல விஷயங்களுக்கான வடிகாலாகவும் நமக்கு அமைந்துவிடுகிறது.
‘என்னது உன் புள்ள மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்கிறானா?’ என்று வீட்டைக் கூட்டிப் பெருக்க வரும் அம்மாவிடம் கேட்கும் கேள்விக்குப் பின்னால், ‘இவருக்கு ஏது இவ்வளவு காசு?’ என்ற குரூரம் ஒளிந்திருக்கிறது. நலிந்த மனிதர்கள் மீது நம்பிக்கைவைக்கத் தயங்குகிற சமூகம், கோழைத்தனமான சமூகம்.

