1905-ம் ஆண்டு டுங் மெங் ஹுயி (Tung Meng Hui) என்னும் ரகசிய அமைப்பை டோக்கியோவில் வைத்து ஆரம்பித்தார் ஸன் யாட் ஸென் (பின்னர், இது கோமிண்ட்டாங் கட்சியாக வளர்ச்சி பெற்றது). அப்போது அவரிடம் இருந்தவர்கள் மொத்தம் பதினைந்து பேர். சீனாவுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த பதினைந்து பேர். அவர்களை அடித்தளமாகக்கொண்டு பணியை ஆரம்பித்தார் ஸன் யாட் ஸென்.

