Kindle Notes & Highlights
(Boxer's Rebellion).
அந்நியப் பேய்களை விரட்டுங்கள் என்பதுதான் இந்தக் கலகத்தின் அடிநாதம். பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் இருந்து வந்து சீனாவை ஆக்கிரமித்திருக்கும் வியாபாரிகளைத் தேடிப்பிடித்துத் தாக்கினார்கள். அவர்கள்
அரசி டோவாகர் சிக்ஸி (Empress Dowager Cixi). பாக்ஸர் கலகத்தையும் அதை முன்னின்று நடத்தியவர்களையும் தட்டிக்கொடுத்து ஆதரித்தார். இளவரசி ஏன் அந்நியர்களை எதிர்க்கவேண்டும்?
சீனாவை அடக்கியாகவேண்டும். ஒவ்வொரு நாடும் கொஞ்சம் வீரர்களைச் சேர்த்து ஒரு கூட்டுப்படையை (EightNation Alliance) உருவாக்கினார்கள்.
1866-ம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஸன் யாட் ஸென். பன்னிரண்டு வயதானபோது, அமெரிக்காவுக்கு அருகிலுள்ள ஹவாய் தீவுக்குச் சென்று அங்கிருந்த ஹோனோலூலூ (Honolulu) என்னும் நகரத்தில் படித்தார்.
1905-ம் ஆண்டு டுங் மெங் ஹுயி (Tung Meng Hui) என்னும் ரகசிய அமைப்பை டோக்கியோவில் வைத்து ஆரம்பித்தார் ஸன் யாட் ஸென் (பின்னர், இது கோமிண்ட்டாங் கட்சியாக வளர்ச்சி பெற்றது). அப்போது அவரிடம் இருந்தவர்கள் மொத்தம் பதினைந்து பேர். சீனாவுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த பதினைந்து பேர். அவர்களை அடித்தளமாகக்கொண்டு பணியை ஆரம்பித்தார் ஸன் யாட் ஸென்.

