ஹைக்கூ என்பது ஒரு snapshot என்று சொல்வார்கள். தினவாழ்வில் நாம் பார்க்கும் ஆச்சரியமான கணங்களை ஒரு சிறிய கவிதையில் சிறைப்படுத்தும்போது எந்தவிதமான உருவகமோ உவமையோ சமூகச்சாடலோ இல்லாமல் வாசகனின் சிந்தனை என்னும் குளத்தில் எறியப்பட்ட ஒரு சிறு கல்லாக இருக்கவேண்டும்.