“மதச்சார்பற்ற அரசு என்பதே இந்திய சுதந்தரத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஒரு சொற்றொடர். இந்தச் சொற்றொடரின் விழுமிய நடைமுறை இன்னும் நம்மிடையே உருவாகவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வட்டிகனைத் தவிர பிற தேசங்களில் மதம் என்பது வேறு, அரசு என்பது வேறு. கோயில் என்பது ‘சர்ச்’ மட்டும்தான். இங்கே நாம் எதையும் கோவிலாக்கி விடுகிறோம். எனவே, கோயிலுக்கும் மதிப்பில்லாமல் ஒழிந்தது.

