வெற்றி பெற்றவர்களிடம் உள்ள ஒற்றுமை என்ன? அவர்கள் அனைவரிடமும் எந்த சில குணாதிசயங்கள் பொது அம்சமாக அமையப்பெற்று இருக்கின்றன? இதைக் கண்டுபிடிக்க அவர் மொத்தம் 121 நிறுவனங்களில் 181 நபர்களிடம் விவரங்கள் சேகரித்தார். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள். அவர்களிடம் இருந்த பல குணாதிசயங்களைப் பட்டியலிட்டார். அவற்றில் முக்கிய குணாதிசயங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டவை இவைதான்: நம்பகத்தன்மை, அனுசரித்துப்போகும் குணம், இணைந்து பணியாற்றும் திறன்.