ஆனால் சில ஆபத்தான சமயங்களில், செய்தி, தலாமஸுக்குப் போகும்போதே இன்னொரு ரூட்டில் அமிக்டலாவுக்கும் போய்விடும். நியோகார்டெக்ஸ்தான் நடப்பதைப் புரிந்துகொண்டு, செய்திகளை யோசித்து, ‘இப்படிச் செய்யலாம்’ என்று அமிக்டலாவுக்குச் சொல்பவர். அவருக்குத் தகவல் தெரியும் முன்னரே அமிக்டலாவுக்குத் தகவல் நேரடியாகப் போய், அவரால் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும்.