கட்டுப்பாட்டில் வை: இட்லியாக இருந்தால் வெற்றி நிச்சயம். பல சமயங்களில் ஏன் இந்த இட்லித்தனம் கைவர மறுக்கிறது? உணர்வுகளின் மீது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால்தான். வெற்றிக்குக் கட்டுப்பாடு அவசியம். மனக் கட்டுப்பாடு. மனம்,அமிக்டலாவின் அடிமையாக இருந்தது போதும். அதனை அறிவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மனம் எத்தனை ஆசை காட்டினாலும், அதைத் தூரத் தள்ளி வைத்துவிட்டு அறிவின் பேச்சை எப்போது கேட்க ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் இட்லியாகி, வெற்றியடைகிறோம். ____________________