மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் (மெமரி சிஸ்டம்ஸ்) உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்மந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமோஷனல் மெமரீஸ் ஸ்டோர். எது நிகழ்ந்தாலும் அமிக்டலா, அதற்கு முன் நிகழ்ந்த பொழுது உடன் நடந்தனவற்றை நினைவூட்டும். முன்பு நடந்ததும் இதுவும் ஒத்துப்போனால், உடனே அலறும். அலாரம் அடிக்கும். உணர்வுகளைக் கட்டுப்பாடின்றி கொட்டச் செய்யும்.