அந்தச் சமயத்தில் எது சரி, எது சரியில்லை என்பதைவிட, எது அவசரம் என்பதுதான் முதலில் கவனிக்கப்படும். இதே நிலைதான் மூளையிலும். மூளையில் மொத்தம் இது சம்மந்தமாக மூன்று இடங்கள் உள்ளன. ஒன்று, தலாமஸ் (Thalamus) இரண்டாவது, விஷுவல் கார்டெக்ஸ் (Visual Cortex) மூன்றாவது, அமிக்டலா கண், காது, மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்தப் புலனில் இருந்தும், செய்தி முதலில் தலாமஸுக்குத்தான் போகும். தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்துகொள்ளும் விதமாக மாற்றும். அப்படி மாற்றிய தலாமஸ், மிகப்பெரும்பாலான செய்திகளை, கார்டெக்ஸுக்கு அனுப்பும். நியோ கார்டெக்ஸில் பல அடுக்குகள் உண்டு. அவற்றின் வழியாகச் செய்திகள் அலசப்பட்டு, அதன்
...more