‘அப்பா கொடுமைக்காரர்’ என்று ஒரு தாய் தன் மகனுக்குச் சொல்லிக்கொடுத்து, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தன் கருத்துக்கு வலுவான சம்பவங்களை எடுத்துச் சொல்லி வந்தால் காலப்போக்கில் மகன் மனத்தில் அப்பா என்பவர் கெட்டவர் என்கிற எண்ணம் வலுப்பெற்றுவிடும். பின்பு எப்பொழுதாவது அப்பாவுக்கும் அம்மாவும் சண்டை வந்தால், அவன் அப்பாவை எதிர்ப்பான். அதனால்தான் எளிமையாக நம்முடைய பெரியவர்கள், ‘நம்முடைய எண்ணங்களே நாம் நடந்து கொள்ளும் விதங்களையும் நம்முடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன’ என்று சொன்னார்கள்.