Emotional Intelligence (Tamil)
Rate it:
19%
Flag icon
வெற்றி பெற்றவர்களிடம் உள்ள ஒற்றுமை என்ன? அவர்கள் அனைவரிடமும் எந்த சில குணாதிசயங்கள் பொது அம்சமாக அமையப்பெற்று இருக்கின்றன? இதைக் கண்டுபிடிக்க அவர் மொத்தம் 121 நிறுவனங்களில் 181 நபர்களிடம் விவரங்கள் சேகரித்தார். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள். அவர்களிடம் இருந்த பல குணாதிசயங்களைப் பட்டியலிட்டார். அவற்றில் முக்கிய குணாதிசயங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டவை இவைதான்: நம்பகத்தன்மை, அனுசரித்துப்போகும் குணம், இணைந்து பணியாற்றும் திறன்.
44%
Flag icon
(Amygdala).
45%
Flag icon
எல்லாம் துறந்த பட்டினத்தார், தன் தாயின் இறப்புக்காக வருத்தப்பட்டதற்கு அமிக்டலாதான் காரணம். பில் கிளிண்டன், மோனிகா லெவன்ஸ்கியால் கவரப்பட்டதற்கும் அமிக்டலாதான் காரணம். நமது கோபம், நமது பயம், நமது வெறுப்பு, ஆத்திரம், அகங்காரம், அன்பு, கனிவு, துக்கம், சோகம் - அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் உற்பத்தி செய்கிற ஃபேக்டரி இதுதான்.
45%
Flag icon
சிறையில் தன்னை எட்டி எட்டி உதைத்த காவல் அதிகாரிக்கு தானே செருப்பு தைத்து கொடுக்குமளவுக்கு காந்தியைக் கனியச் செய்ததும் இந்த அமிக்டலாதான். இதே அமிக்டலாதான், இதே காந்தியின் மீது வெறுப்பு கொண்டு கோட்சேவைக் கொல்லவும் தூண்டியது.
46%
Flag icon
ஜோசப் லே டவுக்ஸ் என்ற நரம்பியல் நிபுணர்தான் முதன் முதலில் அமிக்டலாவுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து சொன்னவர். மிக முக்கியமான அந்த ஆராய்ச்சிகளின் சாரம் இதுதான்: மனிதன் சிந்தித்து முடிவெடுப்பதற்குள், அமிக்டலா இடையில் புகுந்து முடிவெடுத்துவிடுகிறது. மனிதனைத் தன் வசப்படுத்தி, தான் சொல்லும் விதத்தில் செயல்பட வைக்கிறது.
46%
Flag icon
இதன் விளக்கத்தை இப்படிச் சொல்லலாம். உங்கள் சிந்தனை என்பது அறிவுபூர்வமாக நீங்கள் யோசித்து எடுக்கும் முடிவு. இதில் அமிக்டலாவின் பங்களிப்பு எப்படி இருக்கிறது என்றால், உங்கள் சிந்தனை வேகத்தைவிடக் கூடுதல் வேகத்தில் அது வேலை செய்து, உணர்ச்சிபூர்வமான முடிவை உங்களிடம் திணித்துவிடுகிறது.
47%
Flag icon
அமிக்டலாவுடன் மோதிப்பார்க்கும் இன்னொரு நபரும் நமக்குள்ளேயே இருக்கிறார். அது நம் பகுத்தறிவு. அதாவது நியோ கார்டெக்ஸ்.
52%
Flag icon
அந்தச் சமயத்தில் எது சரி, எது சரியில்லை என்பதைவிட, எது அவசரம் என்பதுதான் முதலில் கவனிக்கப்படும். இதே நிலைதான் மூளையிலும். மூளையில் மொத்தம் இது சம்மந்தமாக மூன்று இடங்கள் உள்ளன. ஒன்று, தலாமஸ் (Thalamus) இரண்டாவது, விஷுவல் கார்டெக்ஸ் (Visual Cortex) மூன்றாவது, அமிக்டலா கண், காது, மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்தப் புலனில் இருந்தும், செய்தி முதலில் தலாமஸுக்குத்தான் போகும். தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்துகொள்ளும் விதமாக மாற்றும். அப்படி மாற்றிய தலாமஸ், மிகப்பெரும்பாலான செய்திகளை, கார்டெக்ஸுக்கு அனுப்பும். நியோ கார்டெக்ஸில் பல அடுக்குகள் உண்டு. அவற்றின் வழியாகச் செய்திகள் அலசப்பட்டு, அதன் ...more
53%
Flag icon
ஆனால் சில ஆபத்தான சமயங்களில், செய்தி, தலாமஸுக்குப் போகும்போதே இன்னொரு ரூட்டில் அமிக்டலாவுக்கும் போய்விடும். நியோகார்டெக்ஸ்தான் நடப்பதைப் புரிந்துகொண்டு, செய்திகளை யோசித்து, ‘இப்படிச் செய்யலாம்’ என்று அமிக்டலாவுக்குச் சொல்பவர். அவருக்குத் தகவல் தெரியும் முன்னரே அமிக்டலாவுக்குத் தகவல் நேரடியாகப் போய், அவரால் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும்.
54%
Flag icon
மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் (மெமரி சிஸ்டம்ஸ்) உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்மந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமோஷனல் மெமரீஸ் ஸ்டோர். எது நிகழ்ந்தாலும் அமிக்டலா, அதற்கு முன் நிகழ்ந்த பொழுது உடன் நடந்தனவற்றை நினைவூட்டும். முன்பு நடந்ததும் இதுவும் ஒத்துப்போனால், உடனே அலறும். அலாரம் அடிக்கும். உணர்வுகளைக் கட்டுப்பாடின்றி கொட்டச் செய்யும்.
55%
Flag icon
‘அப்பா கொடுமைக்காரர்’ என்று ஒரு தாய் தன் மகனுக்குச் சொல்லிக்கொடுத்து, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தன் கருத்துக்கு வலுவான சம்பவங்களை எடுத்துச் சொல்லி வந்தால் காலப்போக்கில் மகன் மனத்தில் அப்பா என்பவர் கெட்டவர் என்கிற எண்ணம் வலுப்பெற்றுவிடும். பின்பு எப்பொழுதாவது அப்பாவுக்கும் அம்மாவும் சண்டை வந்தால், அவன் அப்பாவை எதிர்ப்பான். அதனால்தான் எளிமையாக நம்முடைய பெரியவர்கள், ‘நம்முடைய எண்ணங்களே நாம் நடந்து கொள்ளும் விதங்களையும் நம்முடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன’ என்று சொன்னார்கள்.
98%
Flag icon
கோபத்தைக் கட்டுப்படுத்துதல் : ஏமாற்றம் அடையும்போது, பயம் ஏற்படும்போது, தன்மானத்துக்கு ஆபத்து ஏற்படும்போது போன்ற நிலைகளில்தான் கோபம் வருகிறது. இட்லிகள் தங்களுக்குக் கோபம் எப்பொழுதெல்லாம் வருகிறது என்று புரிந்து வைத்துக்கொண்டு, தான் கோபத்தின் பிடியில் சிக்க இருக்கிறோம் என்று தெரிந்துகொண்டு விடுவார்கள். அந்நேரத்தில் உடனே தங்கள் கவனத்தை வேறு ஏதாவது விஷயத்தில் திசை திருப்பி விடுவார்கள்.
98%
Flag icon
இட்லித் தனத்திள் மூன்று அடுக்குகள் : முதல் தட்டு என்பது கீழ் வீட்டில் வசிப்பவர்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் கத்துவார்கள். கோபப்படுவார்கள். சண்டைபோடுவார்கள். சங்கடப்படுவார்கள். அழக்கூட செய்வார்கள். தான் இப்படியெல்லாம் செய்கிறோம், இவை தன் உணர்வுகளால் வருகின்றன, இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பதெல்லாம் தெரியாதவர்கள். அதாவது வேகாத இட்லிகள் மாவு என்றே சொல்லலாம். இரண்டாவது தட்டு என்பது, முதல் மாடியில் இருப்பவர்கள். தான் அதிகம் உணர்ச்சிவசப்படுவது பற்றி இவர்களுக்குத் தெரியும். ஆனால், அதனை மாற்ற அதிகம் முயற்சி எடுக்க மாட்டார்கள். இவர்கள் பாதியே வெந்த இட்லிகள். மூன்றாவது தட்டு என்பது மேல்மாடிக்குப் ...more
99%
Flag icon
கட்டுப்பாட்டில் வை: இட்லியாக இருந்தால் வெற்றி நிச்சயம். பல சமயங்களில் ஏன் இந்த இட்லித்தனம் கைவர மறுக்கிறது? உணர்வுகளின் மீது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால்தான். வெற்றிக்குக் கட்டுப்பாடு அவசியம். மனக் கட்டுப்பாடு. மனம்,அமிக்டலாவின் அடிமையாக இருந்தது போதும். அதனை அறிவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மனம் எத்தனை ஆசை காட்டினாலும், அதைத் தூரத் தள்ளி வைத்துவிட்டு அறிவின் பேச்சை எப்போது கேட்க ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் இட்லியாகி, வெற்றியடைகிறோம். ____________________