More on this book
Community
Kindle Notes & Highlights
by
Jayakanthan
Read between
March 17 - April 21, 2020
நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு. நாடுவது என்னவென்பதே முக்கியம்.
நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.
“மணிலாக் கொட்டைங்கறதுதான் மல்லாக்கொட்டைன்னு ‘கலோக்கிய’லா ஆயிடுச்சு. இது தென்னாப்பரிக்காவிலேருந்து இங்கே வந்திருக்கணும். மணிலாவிலேருந்து வந்ததனால் மணிலாக்கொட்டைன்னு பேரு”
“மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்”
வாழ்க்கையிலே துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்கிறவர்கள்தான் ரொம்பக் குறைவு. அந்தக குறைவானவர்களில் நீங்கள் ஒருவர்…”
ஒரு செடியைப் பாதுகாக்கறதும் தண்ணி ஊத்தறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே.”
“எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னா நாம்ப மனசாலே சின்னக் குழந்தையாயிருக்கணும்னு தெரியுது. சின்னப் பசங்களா இருந்தப்போ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எவ்வளவு ஆச்சரியமா இருந்திச்சு?
“குழந்தைகள் மட்டும்தானா? இந்தப் பறவைகள், மிருகங்கள், வண்ணாத்திப் பூச்சிகள், தேனீக்கள், மலர்கள், செடி கொடி எல்லாமே சந்தோஷமாக மட்டும்தான் இருக்கின்றன”-என்று
“மிருகங்களுக்கும் மற்றவங்களுக்கும் சமூக வளர்ச்சி, வாழ்க்கைப் பிரச்னைகள், தார்மீகப் பொறுப்புகள் ஒன்றும் கிடையாது. மனிதன் அப்படி ஆகக்கூடுமா என்ன? அப்படி ஆனால் அது சரியும் ஆகாதே. பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையில் வளர்ச்சி ஏது”
அந்த எதிரொலிச்சத்தம் ‘பப்பா’ என்று கேட்பதற்குப் பதிலாக, இவன் ‘பப்பா’ என்றழைத்ததும் ‘மகனே’ என்ற கேட்கக் கூடாதா!
உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம்’
சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்…!
“ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்.”