“கிளியாம்பா எனக்குச் சிநேகிதம்னா..? நானாடா அவுங்க வூட்டுக்குப் போனேன்? என் சிநேகிதம் வேணும்னு என்னைத் தேடி அவதான் இங்கே வந்தா. அப்படித்தான் நம்ப சிநேகிதம்! ஏன் தெரியுமா? என் நெலமை அப்பிடி… இந்த வூட்டை விட்டுப் போயிட்டு, இந்த வூட்டுக்கே திரும்பி வந்து வாசல்படி மிதிச்சவதான் - வேற ஒரு வாசல்படி, மிதிச்சிருப்பேனாடா? ‘எதிரிலே வந்தா – சகுனத் தடையா நின்னா’ன்னு உண்டா? கேட்டுப்பாரு. நம்ப நெலமை நமக்குத் தெரியாட்டி அது என்னா சென்மம்? எங்க பூடுது சிநேகிதம்?