கடைசியில் அன்று இரவு சாப்பிடப் போகுமுன் பப்பாவும், மம்மாவும் இருக்கிற அந்தப் படத்தை நடுக்கூடத்தில் வைத்து இரண்டு பக்கமும் குத்து விளக்குகள் ஏற்றி, பூ போட்டு அந்த வேளைச் சாப்பாட்டை நிவேதனம் பண்ணி, வீட்டில் உள்ள எல்லோரும் விழுந்து வணங்கினார்கள். கைக்குழந்தையைக் கூட நவநீதம் படத்தின் முன்னால் வந்து குப்புறப் படுக்க வைத்துத் தூக்கிக்கொண்டு போனாள்.