தேவராஜனுக்குப்பக்கத்தில் ஒரு குழந்தை மாதிரி ஒண்டிக்கொண்டு இருந்தான் ஹென்றி. அவன் உட்கார்ந்தால் அவனோடு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவன் எழுந்தால் அவனோடு எழுந்து நின்று கொண்டு, அங்கே நடக்கிறவற்றைப் பார்த்தவாறு அந்தக் கும்பலில் ஒருவனாய்த் தனிமை கொண்டு இருந்தான் ஹென்றி.