“நான் ஒரு ஹிந்து. என் மூதாதையர்கள் எல்லாம் சைவ மதத்தை நம்பி என்னென்ன மாதிரி வாழ்ந்து எப்படி சிவலோகப்பதவி அடைந்தார்களோ, அப்படியே போக விரும்பறவன் நான். நான் இறந்து போனால் ஹிந்து வைதிக முறைப்படி என்னைத் தகனம் செய்ய வேண்டியது. என் பேராலே ஒருபிடி சாம்பல்கூட இருக்கக்கூடாது. ‘நான்’ என்கிறது இந்த சபாபதிப் பிள்ளையோ இந்த உடம்போ இல்லை. அதனாலே இந்த சபாபதிப் பிள்ளைக்கு அல்லது எனக்குச் சொந்தம்னு இருக்கிற அப்படி யாராவது இருந்தால், அவுங்க அந்தச் சொந்தத்தை அவுங்க கையாலேயே அழிக்கறதுக்கு அடையாளமாக அவுங்க கையாலேயே கொள்ளி வைக்க வேண்டியது. இது ஒரு கட்டாயமோ என் இஷ்டமோ கூட