விறகையும் நெருப்பையும் நமது அன்றாடப் பார்வையிலேயே இருதனித்த இருப்பாகப் பார்க்கிறோம். விறகு கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. நெருப்பும் கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் பார்ப்பது எரிதலையேதான். எரிதலின் தர்மமே எரிதல் என்பது. காண்பதெல்லாம் தர்மமே. மகாதர்மமன்றி எதுவும் எங்கும் இல்லை. பார்ப்பதும் பார்க்கப்படுவதும் அதுவே.